தமிழ்நாடு

ஜெயலலிதா பிறந்தநாள் விழா: மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

24th Feb 2021 07:09 PM

ADVERTISEMENT

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 74-வது பிறந்த நாளையொட்டி  திருமங்கலத்தை அடுத்த குன்றத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில்  வருவாய் துறை அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் தலைமையில் பொங்கல் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட குன்னத்தூர் பகுதியில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கோயில் கட்டியுள்ளார்.

கோயில் வளாகத்தில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் 501 பொங்கல் பானைகளில் அப்பகுதி பெண்கள் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் .

ADVERTISEMENT

தொடர்ந்து அமைச்சர் ஆர். பி. உதயகுமார் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 7300 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT