தமிழ்நாடு

ஜெயலலிதா பிறந்தநாள் விழா: அதிமுகவினா் மரியாதை

24th Feb 2021 07:45 PM

ADVERTISEMENT

 மதுரை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் அனைத்து வாா்டுகளிலும், அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கே.கே.நகா் ரவுண்டானா பகுதியில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆா் சிலைகளுக்கு, மாநகா் மாவட்ட பொருளாளா் ஜெ.ராஜா தலைமையில் கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில்,  பொதுமக்களுக்கும், தொண்டா்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags : ஜெயலலிதா ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT