தமிழ்நாடு

விழுப்புரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

24th Feb 2021 05:52 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழுப்புரம், சென்னை சாலையில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா விழுப்புரம் நகரச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் பட்டாசு வெடிக்கும் கொண்டாடினர். விழாவில் இனிப்புகளுள் வழங்கப்பட்டன. 

தொடர்ந்து விழுப்புரம், வண்டிமேடு பகுதியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமதாஸ் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அதிமுகவினர் அன்னதானம் வழங்கினர். 

ADVERTISEMENT

விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலை சண்முகமும் காலனி பகுதியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பசுபதி தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதில் அதிமுகவினர் இனிப்பு வழங்கியும், அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர்.

விழுப்புரம், மாம்பழம்பட்டு சாலையில் அம்மா பேரவை துணை செயலாளர் திருப்பதி பாலாஜி தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினா 73-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கியுமம், நலத்திட்ட உதவிகள் வழங்கியும்
கொண்டனர்.

இந்த விழாக்களில் விழுப்புரம் அதிமுக நகரச் செயலாளர் பாஸ்கரன். அதிமுக மருத்துவர் அணி முத்தையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வளவனூர் அருகே இலக்கியனூரில் கோலியனூர் ஒன்றியச் செயலாளர் பேட்டை முருகன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. 

இதில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடினர்.
 

Tags : ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT