தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

24th Feb 2021 01:05 PM

ADVERTISEMENT

 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக்குழு தலைவர் சிந்து முருகன், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் மீராதனலட்சுமி முருகன், நகரச் செயலாளர் எஸ்.எம். பாலசுப்பிரமணியம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தேரடியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ADVERTISEMENT

இதில் முன்னாள் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ்,அத்திகுளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணி, மற்றும் மாவட்ட,நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : ஜெயலலிதா பிறந்த நாள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT