தமிழ்நாடு

நீடாமங்கலத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

24th Feb 2021 03:08 PM

ADVERTISEMENT

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா நீடாமங்கலம் ஒன்றியத்தில் அ.தி.மு.கவினரால் புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். வடக்குஒன்றிய பொறுப்புசெயலாளர் ஆதிஜனகர், நகரசெயலாளர் ஷாஜஹான், எம்.ஜி.ஆர்.மன்றத் 
தலைவர் பெரியதம்பி, ரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய அணிநிர்வாகி குமாரசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். 

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அ.தி.மு.க.ஒன்றிய,நகரநிர்வாகிகள்,எம்.ஜி.ஆர்மன்றம்,ஜெபேரவை மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் மாலையணிவித்தும், மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினர். இனிப்புகளும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ஒன்றியம்பூராவும் பல்வேறு கிராமங்களிலும் ஜெயலலிதாவின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டுமரியாதை செலுத்தப்பட்டது. வலங்கைமான் ஒன்றியத்திலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றியக்குழு இளவரசன் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT