தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

24th Feb 2021 05:18 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகில், நகர அ.தி.மு.க., சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், 73-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

நகரச் செயலாளர் கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் கே.அசோக்குமார், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும்  பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ., முனிவெங்கடப்பன், முன்னாள் பால்வளத் தலைவர் தென்னரசு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி, பர்கூர், ராயக்கோட்டை, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டிணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT