தமிழ்நாடு

திண்டுக்கல்லில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

24th Feb 2021 05:08 PM

ADVERTISEMENT

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அமைப்புச் செயலர் வி.மருதராஜ் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு கூடி நின்ற தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாணவரணி, இளைஞர் மற்றும் இளம் பாசறை அணி உள்ளிட்ட நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டனர். அதேபோல், அமமுக சார்பிலும் எம்ஜிஆர் சிலை  அருகிலேயே  மற்றொரு இடத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் பி.ராமுத்தேவர் தலைமை வகித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT