தமிழ்நாடு

உசிலம்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா 

24th Feb 2021 02:25 PM

ADVERTISEMENT

 

அதிமுக சார்பில்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உசிலம்பட்டி நகரச் செயலாளர் பூமா ராஜா தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி அதிமுக நகர் கழகத்தின் சார்பாக உசிலம்பட்டி தேவர் சிலை அருகே நகரச் செயலாளர் பூமா ராஜா தலைமையில் நகரப் பேரவைச் செயலாளர் லட்சுமணன் எம்.ஜி.ஆர் மன்றம் உக்கிரபாண்டி கே.எஸ்.லட்சம் ஆண்டி, ராமமூர்த்தி, மாரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

உசிலம்பட்டி நகர்ப் பகுதியில் உள்ள வார்டுகளில் பேரவைச் செயலாளர் லட்சுமணன் தலைமையில் நகரச் செயலாளர் பூமாராஜா கழகக் கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

ADVERTISEMENT


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT