தமிழ்நாடு

ஜெயலலிதா பிறந்தநாள் விழா: தருமபுரியில் அன்னதானம் 

24th Feb 2021 04:44 PM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டத்தில், அதிமுக சார்பில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73}ஆவது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில், மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் தகடூர் விஜயன் தலைமை வகித்தார். நகரச் செயலர் பெ.ரவி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், தருமபுரி ஒன்றியக்குழுத் தலைவர் நீலாபுரம் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

விழாவையொட்டி, கட்சி அலுவலகத்தில் அதிமுக கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இதேபோல, பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே நகரச் செயலர் சங்கர் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவலர்க் குழுத் தலைவர் கே.வி.அரங்காதன் ஆகியோர் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

காரிமங்கலம், நல்லம்பள்ளி, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை உள்பட தருமபுரி மாவட்டம் முழுவதும், கட்சி கொடியேற்றி, ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் கொண்டாடினர்.

Tags : ஜெயலலிதா பிறந்தநாள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT