தமிழ்நாடு

காரைக்காலில் ஜெயலலிதா பிறந்தநாள்: அன்னதானம் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம் 

24th Feb 2021 05:05 PM

ADVERTISEMENT

 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மரியாதையும், பல்வேறு இடங்களில் அன்னதானம், இனிப்பு வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன்படி, ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைத்திருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான எம்.வி.ஓமலிங்கம் தலைமையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வாயிலில் அதிமுக கொடியேற்றப்பட்டது. இதுபோல மாவட்டத்தில் பல இடங்களில்  அவரது உருவப்படம் வைத்து மரியாதையும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட பள்ளிவாசல் அருகே அதிமுக சார்பில் அன்னதானம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலர் எம்.வி.ஓமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா உள்ளிட்டோர் கலந்துகொண்டு நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கினர். பேருந்து நிலையம் அருகிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எச்.எம்.ஏ.காதர், இணைச் செயலர் கே.ஜீவானந்தம்  உள்ளிட்ட மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT