தமிழ்நாடு

முதல்வர் தொகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

24th Feb 2021 11:46 AM

ADVERTISEMENT

 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவினை, அ.தி.மு.க.வினர் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, எடப்பாடி நகர அ.தி.மு.க சார்பில், புதனன்று காலை எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

முன்னதாக ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த அ.தி,மு.கவினர், பேருந்து நிலையத்திலிருந்த பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து நகர அ.தி.மு,க சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கூட்டுறவு சங்கத்தலைவர் கந்தசாமி , அறங்காவல்குழு தலைவர் நாராயணன், ஜெமினிசீனிவாசன், அறிவழகன் உள்ளிட்ட திரளான அ.தி.மு.கவினர் கலந்துகொண்டனர். 

கொங்கணாபுரம் ஒன்றியப்பகுதியில் பல்வேறு இடங்களில் அ.தி,மு.க.வினர் ஜெயலலிதாவின் பிறந்ததினத்தினை கொண்டாடினர். கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில்,
முன்னாள் பேரூராட்சித்தலைவர் சாமி (எ)பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.கவினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.  

ADVERTISEMENT

மூலப்பாதை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், கோரணம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் எஸ.ஏ.ராஜ்குமார் தலைமையில் திரண்ட அ.தி.மு.கவினர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடினர். பக்கநாடு, சித்தூர், பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT