தமிழ்நாடு

ஜெயலலிதா அருங்காட்சியகம்: திறந்து வைத்தார் முதல்வர்

24th Feb 2021 11:47 AM

ADVERTISEMENT

 

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது அருங்காட்சியகத்தை, முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாள் இன்று கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அவரது அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. அதனுடன் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அறிவுசார் பூங்காவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

முன்னதாக கடந்த ஜன.27-ஆம் தேதியன்று, ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டது.  இதன்பின்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தை இன்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
 

Tags : jayalalithaa Palanisamy TN CM
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT