தமிழ்நாடு

கண்டிராதித்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

24th Feb 2021 12:42 PM

ADVERTISEMENT

 

அரியலூர் மாவட்டம், கண்டிராதித்தம்  கிராமத்தில்  ஜல்லிக்கட்டு புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், கண்டிராதித்தம் கிராமத்திற்கு அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 

போட்டியினை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

ADVERTISEMENT

இதில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் அழித்து விடப்பட்டன. காளைகளை அடக்க களத்தில் 50 வீரர்கள் என சுழற்சி முறையில் 250 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டனர். காளையை  அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், ரொக்க பணம், கிரைண்டா், வெள்ளி பொருள்கள், சில்வா் பொருள்கள், டிவி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருள்கள்  வீரர்கள் காயமடைந்தனர்.


 

Tags : ஜல்லிக்கட்டு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT