தமிழ்நாடு

உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 70 காளைகள் 50 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

24th Feb 2021 01:30 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுக்கு ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு சீமானூத்து, நல்லிவீரன்பட்டி, நல்லிவீரன்பட்டி, கொக்குடையான்பட்டி, மெய்யணம்பட்டி. பெரியசெம்மேட்டுபட்டி என 7 கிராமமும் ஒன்றிணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. 

கரோனாவிற்கு விதிக்கப்பட்ட அரசின் விதிமுறைகளின் படி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிற்கும் தலா 70 காளைகள் 50 மாடுபிடி வீரர்கள் ஏன் 13 சுற்றுப்போட்டி ஆக மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் காளைகளுக்கு வழங்கப்பட்ட டோக்கன் முறைப்படி வரிசையாகக் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ADVERTISEMENT

ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் ராஜ்குமார்  தலைமையில் துவக்கி வைக்கப்பட்டு மாடு பிடி வீரர்கள் கோட்டாட்சியர் ராஜ்குமார் முன்னிலையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் முதல் பரிசாக ஆட்டோ கார் இரண்டாம் பரிசாக பைக் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர் முதல் பரிசாக புல்லட், இரண்டாம் பரிசாக பைக் வெள்ளிக்காசு கட்டில், சில்வர். தங்க நாணயம் பணம் அண்டா பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், சைக்கிள், குக்கர், பேன், மிக்ஸி உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கக் கிராம கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். 

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் ஜல்லிக்கட்டு நடத்தும் விழாவினை ஆய்வு மேற்கொண்டார். மேலும். மருத்துவக் குழுவினர் வட்டார மருத்துவ அலுவலர் சுசிலா தலைமையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் முதலுதவி செய்யத் தயார் நிலையில் உள்ளனர். உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினர் தங்கம் தலைமையில் மற்றும் சோழவந்தான் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காயமடைந்த வீரர்களை மேல் சிகிச்சைக்காக  ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றதில் பிற்பகல் 12 மணி வரை 28 பேர் காயங்கள் அடைந்தனர். இதில், பத்திற்கும் மேற்பட்ட வீரர்களை மேல்சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். 

காளைகளை முறையாக வரிசைப்படுத்தி ஒவ்வொன்றும் பின் ஒவ்வொன்றாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அடுத்தடுத்த சுற்றுக்கான வீரர்களையும் தயார்ப்படுத்தி வருகின்றனர். இதில் உசிலம்பட்டி சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்டுகளித்தனர். 

Tags : ஜல்லிக்கட்டு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT