தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி: அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

24th Feb 2021 04:40 PM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆம் பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில் ஆரம்பாக்கம், எளாவூர், பெருவாயல், புதுவாயல், மாதர்பாக்கம், மாநெல்லூர், பாதிரிவேட்டில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவிற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.அபிராமன், மாவட்ட முன்னாள் மாணவர் அணி செயலாளர் முல்லைவேந்தன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி என்.சிவா முன்னிலை வகித்தனர்.

ஆரம்பாக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் பிரகாஷ், நிஜாம், ஐயப்பன், சேகர், முரளி ஏற்பாட்டில் ஆரம்பாக்கம் பஜார், பாட்டைக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகிய 3 பகுதிகளில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், மாநில மீனவரணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ், ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு கட்சி கொடியேற்றி, .ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்ததோடு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

ADVERTISEMENT

எளாவூரில் பெரிய ஓபுளாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத் தலைவர் முல்லைவேந்தன், அதிமுகநிர்வாகிகள் ஏழுமலை,மனோஜ் உள்ளிட்டோர் ஏற்பாட்டில் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டதோடு, அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பெருவாயலில் அதிமுக நிர்வாகி ஜெயராமன் ஏற்பாட்டிலும், புதுவாயலில் அதிமுக நிர்வாகி இளவரசன் ஏற்பாட்டிலும் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில்  அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

பாதிரிவேடு, மாதர்பாக்கம், மாநெல்லூரில் தொகுதி செயலாளர் தியாகராயம், டேவிட் குமார், சரவணன் உள்ளிட்டோர் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில்  1000பேருக்கு ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் அன்னதானம் வழங்கினார்.

அவ்வாறே கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை  ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

மேலும் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார்தலைமையில் எளாவூர், புதுவாயல், சிறுபுழல்பேட்டை உள்ளிட்ட10க்கும் மேற்பட்ட பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் நகரச் செயலாளர் மு.க.சேகர், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் இமயம் மனோஜ், டி.சி.மகேந்திரன், சுகுமார், ரமேஷ்குமார், எஸ்.டி.டி.ரவி,ஓடை ராஜேந்திரன், தீபக் செந்தில், எம்.ஏ.மோகன், சரவணன், எஸ்.ஆர்.ராஜா ,ராஜா பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT