தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே சரக்கு பெட்டக லாரி மோதி முதியவர்கள் பலி

24th Feb 2021 05:15 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது சரக்குப் பெட்டக லாரி மோதியதில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள குப்பச்சிபாறை கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (81), விருப்பசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கோஜி ராவ் (81). இவர்கள் இருவரும் குருபரப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகத் தேசிய நெடுஞ்சாலையை கடக்க புதன்கிழமை முயன்றனர்.

அப்போது, தில்லியிலிருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்குப் பெட்டக லாரி இவர்கள் மீது மோதியது. இதில் ராமன், கங்கோஜி ராவ் ஆகிய இருவரும்  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்துச்சென்று இரண்டு சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT