தமிழ்நாடு

பனங்காட்டான்குடி - மாதிரேவளூர் பகுதியில் தார்ச்சாலை அமைக்கப் பூமி பூஜை

24th Feb 2021 01:38 PM

ADVERTISEMENT

 

பனங்காட்டான்குடி - மாதிரேவளூர் பகுதியில் 14 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கப் பூமி பூஜை நடைபெற்றது. இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றார். 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த பனங்காட்டான்குடி மாதிரவேளுர் பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதம் அடைந்திருந்தது சாலையைச் சீரமைக்க வேண்டுமென சீர்காழி எம்எல்ஏ பிவி பாரதி  தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். 

இதனையடுத்து  சேதமடைந்த சாலையைச்  சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பனங்காட்டான் குடி மாதிர வேலூர் வரை சுமார் 9 கிலோமீட்டர் சாலை சீரமைப்பு பணிக்காக ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய சாலை அமைக்கப் பூமி பூஜை  நடைபெற்றது. 

ADVERTISEMENT

விழாவிற்கு மேற்கு  ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.எம் நற்குணன் முன்னிலை வகித்தர். பூமி பூஜையில் சீர்காழி எம்எல்ஏ பாரதி கலந்துகொண்டு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி வைத்தார். 

விழாவில் மாவட்ட மீனவர் அணி செயலாளர்  நாகரத்தினம், மாவட்ட இணைச்செயலாளர் ரீமா ராஜ்குமார் ஒன்றிய பொருளாளர் சொக்கலிங்கம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பாலதண்டாயுதம் கூட்டுறவு வங்கி தலைவர்கள் அருண், கருணாகரன் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் இனியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT