தமிழ்நாடு

சங்ககிரியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை 

24th Feb 2021 06:55 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஆலத்தூர் ரெட்டிபாளையத்தில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜையும், புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஆலத்தூர்ஊராட்சிக்குள்பட்ட ஆலத்தூர் ரெட்டிபாளையத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 15வது நிதிக்குழுவின் கீழ் ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்தும் அடிக்கல் நாட்டியும் மேலும் புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2019-2020ன் கீழ் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டடத்தை குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தார். 

சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி எம்.மகேஸ்வரிமருதாஜலம் இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்.எஸ்.ரவிச்சந்திரன், சங்ககிரி அதிமுக மேற்கு ஒன்றிய செயலர் சுந்தரராஜன்,  கிழக்கு ஒன்றிய துணைச் செயலர் மருதாஜலம்,  சங்ககிரி முன்னாள் தொகுதி கழகசெயலர் வி.ஆர்.ராஜா, அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT