தமிழ்நாடு

உசிலம்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

24th Feb 2021 05:21 PM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  சாலை மறியலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கைது செய்தனர். 

இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்தும் தனியார் துறையில் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தக் கோரிக்கை விடுத்தும் அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பிட வேண்டும், மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கும் 100 நாள் வேலையை 125 நாளாக மாற்றக் கோரிக்கை வைத்து மாவட்டத் தலைவர் காட்டுராஜா உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சின்னசாமி மற்றும் தவமணி, நாகராஜ், மகாலிங்கம் திருக்க ராஜ், காந்தி முன்னணியில் மாநிலச் செயலாளர் முத்து காந்தாரி வாழ்த்திப் பேசினார்.

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  சாலை மறியலில் ஈடுபட்டனர் பின்னர் காவல்துறையினர் 70 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT