தமிழ்நாடு

நாகர்கோவிலில் ஜெயலலிதா சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிப்பு 

24th Feb 2021 05:49 PM

ADVERTISEMENT

 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமையில் சுசீந்திரம் தேரூர் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அழகேசன், பொன்.சுந்தர்நாத், பொன்.சேகர், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் சதாசிவம், நிர்வாகிகள் ஜான்சிலின் விஜிலா, சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

நாகர்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, ஒன்றியத்துக்குள்பட்டபகுதிகளிலும் முக்கிய சந்திப்புகளில் ஜெயலலிதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT