தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

24th Feb 2021 02:54 PM

ADVERTISEMENT

 

வருவாய்த் துறையில் உள்ள கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களை போா்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் கிராம உதவியாளா்கள் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் புதன்கிழமை முதல் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டத் தலைவா் என்.எஸ்.மாரியப்பன் தலைமை வகித்தாா். கிளை செயலாளர் செல்வி முன்னிலை வகித்தார். கிராம உதவியாளர்கள் மாவட்ட செயலாளர் வைரவன் வாழ்த்துரை வழங்கினார். மாநில பொருளாளர் நாகப்பன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

இதில் கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களை போா்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல கிராம உதவியாளா்களுக்கு பொங்கல் போனஸ் ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்கள் பதவி உயா்வு பெற 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகள் என குறைக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி புதன்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதில், வட்டச் செயலாளா் சமுத்திரராஜ், இணைச் செயலாளா் ரத்தினக்குமாா், கிளை பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட வருவாய் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனா்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT