தமிழ்நாடு

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஓமலூரில் 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

24th Feb 2021 12:55 PM

ADVERTISEMENT

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஓமலூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

ஓமலூர் நகர அதிமுக சார்பில் பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, 73 கிலோ அளவில் செய்யப்பட்டிருந்த கேக்-ஐ அவர் வெட்டி பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு வழங்கினார். இதனையடுத்து, இனிப்பு மற்றும் அன்னதானமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோன்று ஓமலூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மேட்டூர் பிரிவு சாலை அருகில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், ஓமலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான எஸ்.எஸ்.கே.ஆர்.ராஜேந்திரன், புதிதாக 73 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிவபெருமான், பல்பாக்கி சி.கிருஷ்ணன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசந்திரன், நகர அதிமுக செயலாளர்கள் கோவிந்தசாமி, சரவணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் தளபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று, கருப்பூர், காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி, சின்னதிருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Tags : ஜெயலலிதா பிறந்தநாள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT