தமிழ்நாடு

'நாளைமுதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்'

24th Feb 2021 08:15 PM

ADVERTISEMENT

 

சென்னை: நாளைமுதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளன.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (பிப்.25) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் வியாழக்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஏற்கெனவே விடுப்பு விண்ணப்பித்தவர்களும் வியாழக்கிழமை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளைமுதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக புதனன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் அளித்துள்ள பேட்டியில், ‘நாளைமுதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்; பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என போக்குவரத்து கழகம் அனுப்பிய நோட்டீசுக்கு பயப்பட மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT