தமிழ்நாடு

பிப். 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

23rd Feb 2021 05:00 PM

ADVERTISEMENT

 

சென்னை: பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்

இதுதொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ‘போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை.

எனவே ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை உடனே வழங்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 25 முதல் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT