தமிழ்நாடு

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தேரோட்டத் திருவிழா

23rd Feb 2021 04:57 PM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் சென்னை செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள சுயம்பு மூர்த்தியான அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஶ்ரீகந்தசுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் பிரமோற்சவ பெருவிழாவில் 7ஆம் நாள் ரதோற்சவம் தேரோட்டத் திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 

கடந்த புதன்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ பெருவிழாவில் தினந்தோறும் காலை, மாலை இரவு வாகன உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தின் ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை ரதோற்சவம் தேரோட்டத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 

ADVERTISEMENT

விழாவையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மஹா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் ஊர்வலமாக வந்து தேர் நிலையில் புஷ்பங்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி நிறுத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றதையடுத்து தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. 

சென்னை, தாம்பரம், திருப்போரூர், மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 10 ஆயிரத்திற்கு மேல் பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களுடன் தேரின் வடம் பிடித்து இழுத்து சாமியை வழிப்பட்டனர்.

தேரோட்ட திருவிழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கோட்டாட்சியர் செல்வம், முன்னாள் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும் அஇஅதிமுக அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளருமான தண்டரை கே.மனோகரன் , மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், மகளிரணி செயலாளர் மரகதம் குமரவேல் ஒன்றிய செயலாளர் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், மதிமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.லோகு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். 

விழாவிற்கான  ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் எம். சக்திவேல், தக்கார் மற்றும் உதவி ஆணையர் பெ.க.கவெனிதா, மேலாளர் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் ஸ்ரீபாதம் தாங்கிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : திருப்போரூர் தேரோட்டத் திருவிழா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT