தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சாலை மறியல்

23rd Feb 2021 03:01 PM

ADVERTISEMENT

 

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் 180-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் திருவாலங்காடு ஒன்றிய தலைவர் எ.கன்னியம்மாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் கோரிக்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். இதில், 37 ஆண்டுகளாக சிறப்பு காலமுறை ஊதியத்தால் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கவும், பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கவும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து திடீரென சென்னை}திருப்பதி சாலையில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். உடனே, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகிய 180-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து தனியார் அரங்கத்தில் அடைத்து வைத்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT