தமிழ்நாடு

கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வு

23rd Feb 2021 05:04 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்குப் பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் மதுரை மாவட்ட காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைக்கான எதிரான குற்றத் தடுப்பு பிரிவு குழந்தைகள் நலக்குழு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தொழிலாளர் நலத்துறை வருவாய்த் துறை சமூக நலத்துறை பள்ளிக்கல்வித்துறை சுகாதார நலப்பணி மற்றும் கல்லூரி கிராமக் கல்வித்திட்டம் சார்பாக சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

இதில் உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமை வகித்தார் வட்டாட்சியர் விஜயலட்சுமி குழந்தைகள் நலக்குழு தலைவர் டாக்டர் விஜய் சரவணன் கல்லூரி அதிபர் ஜான் பிரகாசம் கல்லூரி செயலாளர் கில்பர்ட் கமிலஸ் கல்லூரி முதல்வர் கட்வின் ரூபஸ் இயக்குனர் லாசர் சே மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளிடம் சிசுக்கொலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரைகள் வழங்கினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT