தமிழ்நாடு

பட்ஜெட்: 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.2,470 கோடி

23rd Feb 2021 01:04 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.2,470.93 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பில்,  தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக ரூ.2,470 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதன் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 1650 மருத்துவ மாணவ சேர்க்கை இடங்கள் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக மக்கள் நல்வாழ்வுத்துறை 19,420.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : medical college ops budget
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT