தமிழ்நாடு

அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் 2வது நாளாக காத்திருப்புப் போராட்டம்

23rd Feb 2021 03:07 PM

ADVERTISEMENT

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிமேகலா தலைமை வகித்தார். இதில் செயலாளர் எஸ்.லதா முன்னிலை வகித்தார். அப்போது பல்வேறு இடர்பாடு காலகட்டங்களில் பணி செய்துள்ளோம். அதனால் எங்கள் நிலை கருதி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த காத்திருப்புப் போராட்டத்தில் அச்சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT