தமிழ்நாடு

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு

23rd Feb 2021 03:21 PM

ADVERTISEMENT

 

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு தமிழக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதல்வர் பழனிசாமி, விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்துப் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். 

இதனால், 16,43,347 விவசாயிகள் செலுத்த வேண்டிய மொத்தம் 12,110.74 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கோவிட்-19 காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கூட, தமிழக முதல்வர் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்திற்காக, 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 

Tags : ops loan waiver
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT