தமிழ்நாடு

தினமணி.காம் செய்தி எதிரொலி: நடிகர் அஜித் பெயரை இழிவுபடுத்தியவர்கள் மீது புகார்

23rd Feb 2021 09:35 AM

ADVERTISEMENT

 

நடிகர் அஜித்தின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் விளம்பர பதாகை வைத்தவர்கள் மீது ரசிகர் மன்றத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. அந்த ஜல்லிக்கட்டுப் போட்டியையொட்டி  விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. 

அந்த விளம்பர பதாகையில் அஜித் படமும் சுற்றிலும் மதுபாட்டில்கள் படமும் இருந்தது. அதில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இருந்தது. இது அஜித் ரசிகர்கள் மனதை புண்படுத்துவதாகக் கூறி விளம்பர பதாகையில் உள்ள ஆறு பேர் மீது வையம்பட்டி காவல்நிலையத்தில் ரசிகர் மன்ற செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் வையம்பட்டி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

 

Tags : Actor Ajith
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT