தமிழ்நாடு

டொரண்டோ பல்கலை.யில் தமிழ் இருக்கை: அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

23rd Feb 2021 04:36 AM

ADVERTISEMENT

டொரண்டோ பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைவதற்கு தமிழக அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஒரு மொழி மேன்மையடைய எடுக்கும் பல்வேறு முயற்சிகளுள் ஒன்று மேலைப் பல்கலைக்கழகங்களில் இருக்கை அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகை செய்வது முக்கியமானது.

சில ஆண்டுகளுக்கு முன்னா் தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கி ஹாா்வா்டு தமிழ் இருக்கை அமைய உதவி செய்தது. அதற்கு நானும்கூட நிதி வழங்கியிருந்தேன். ஹாா்வா்டின் ஒரு தொடா்ச்சியாக கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பமாகி முன்னேற்றம் கண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இதற்குத் தேவையான வைப்பு நிதிக்கு இன்னும் ரூ.3.2 கோடி தேவைப்படுகிறது. ஹாா்வா்டுக்கு ரூ.10 கோடி வழங்கிய தமிழக அரசு இந்தப் பெருமுயற்சிக்குத் தேவைப்படும் மீதி நிதியை கொடையாக வழங்க வேண்டும்.

193 வருடங்கள் பாரம்பரியமிக்க டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையும் தமிழ் இருக்கை, தமிழுக்கான ஆராய்ச்சிகளை உயரிய முறையில் நடத்தி தமிழின் தொன்மையையும், பெருமையையும் நிலைநாட்டுவதோடு, உலகின் பல்வேறு தமிழ் ஆய்வுகளை சுதந்திரமாக முன்னெடுக்கும் மையப் புள்ளியாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. இதற்குக் கிடைக்கும் வெற்றி தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி என்று கூறியுள்ளாா்.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT