தமிழ்நாடு

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது: முதல்வர் பழனிசாமி

22nd Feb 2021 03:54 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக பூத்கமிட்டி மகளிரணி ஆலோசனைக் கூட்டம் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் தலைமையில் நடைபெற்றது. 

அனைவரையும் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும் சேலம் மாவட்ட கழக செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது, 

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் உங்களது குடும்பத்தில் ஒருவராக இருக்கும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சகோதரரைப் பார்க்க ஆவலோடு கூட இருப்பது அதிமுகவில் மட்டுமே. இந்த கூட்டம் வருகிற தேர்தலில் நாம் வெற்றியடைய அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது. நீங்கள் முழுமனதுடன் முனைப்பாகச் செயல்படவேண்டும். 

2016ல் அம்மா கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை அம்மாவின் அரசு அனைத்தையும் செய்து கொடுத்துள்ளது. சொல்வதைச் செய்கிற அரசாகத் திகழ்ந்து வருகிறது. உள்ளாட்சியிலே மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தருவதாக அம்மா அறிவித்து மறைந்தாலும் அவருடைய கனவை அம்மாவின் அரசு செய்து காட்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 
 

Tags : சேலம் TN CM அதிமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT