தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

22nd Feb 2021 10:21 AM

ADVERTISEMENT

புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிகை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் நாராயணசாமி. 
புதுவையில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில்
காங்கிரஸ் 15 இடங்களில் வென்றது. இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் 3 பேர், சுயேச்சை ஒருவர் என மொத்தம் 19 உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன்
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. 
தற்போது 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு திமுக எம்எல்ஏ பதவி விலகியதால், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12-ஆகக் குறைந்தது. எதிா்க்கட்சித் தரப்பில்
என்.ஆா். காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக 3 (நியமனம்) என 14 போ் உள்ளனா். 
இதனிடையே எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில்
திங்கள்கிழமைக்குள் (பிப்.22) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 19-ஆம் தேதி உத்தரவிட்டார். அதன்படி புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. 

அப்போது, பேரவையில் நம்பிகை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், புதுச்சேரியில்
காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. புதுச்சேரி மக்கள் எங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். 
மக்களுக்காக தொடர்ந்து பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு போதிய நிதி கிடைக்கவில்லை. முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் நெருக்கடி அளித்தது மத்திய அரசு. எதிர்க்கட்சியினர் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தனர்.
தேர்தலில் வெற்றிபெறாத எதிர்க்கட்சி தற்போது சதி செய்து வருகிறது. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்தேன். கடந்த ஆட்சி செய்ய தவறிய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். கரோனா காலத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT