தமிழ்நாடு

புதுச்சேரி பேரவை துணைத் தலைவர் இல்லத்தில் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

22nd Feb 2021 09:14 AM

ADVERTISEMENT

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பேரவை துணைத் தலைவர் பாலன் இல்லத்தில் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார்.
புதுச்சேரியில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 
அரசுக்கு ஆதரவளித்து வரும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பதவி விலகி வரும் நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணிக்கு புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது. 
தனது அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக இன்று காலை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பேரவை துணைத் தலைவர் பாலன் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
 

Tags : Puducherry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT