தமிழ்நாடு

அவிநாசி அருகே கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் பலி

22nd Feb 2021 05:50 PM

ADVERTISEMENT

 

அவிநாசி அருகே மேற்கு வஞ்சிபாளையத்தில் தோட்டத்து கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சி மேற்கு வஞ்சிபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் கிணறு உள்ளது. இதில் வழி தவறி வந்த புள்ளிமான், கிணற்றுக்குள் விழுந்து வெளியேற முடியாமல் போராடியது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  அவிநாசி தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் கிணற்றுக்குள் விழுந்த மானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை மாலை வரை  போராடி, 40 அடி ஆழம் உள்ள நீர் இல்லாத கிணற்றிலிருந்து  மீட்டனர். 

ADVERTISEMENT

இருப்பினும் ஒரு வயதான ஆண் புள்ளிமான்  நிலையில், இங்கு வந்த ஒரு வயது ஆண் புள்ளிமான் உயிரிழந்தது. நீண்ட நேரம் போராடி மானை உயிருடன் மீட்க முடியாததால் பொதுமக்கள் ஆழ்ந்த சோகத்திற்கு உள்ளாகினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT