தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயிலுக்கு பூமி பூஜை: முதல்வர் பங்கேற்பு

22nd Feb 2021 04:20 PM

ADVERTISEMENT


உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கட்டப்படவுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில் பூமி பூஜையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார்.

உளுந்தூர்பேட்டையில் கட்டப்பட உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில் பூமி பூஜை மற்றும் திருக்கல்யாண உற்சவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்.

மேலும், பூமி பூஜையில் கலந்து கொண்டு கோயில் கல்வெட்டினை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில் தமிழக அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எம்.சி. சம்பத், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, ஆர். குமரகுரு எம்எல்ஏ, ஆட்சியர் கிரண் குராலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT


அதோடு, உளுந்தூர்பேட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டை - திருப்பதி புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையினை முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

Tags : Tirupati Temple tn cm
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT