தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தேர்தல்: பாமக சார்பில் போட்டியிட 23ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம்

20th Feb 2021 09:15 PM

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் 23-ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட  விரும்புவோரிடமிருந்து பிப்ரவரி 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.

சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மண்டல அலுவலகத்தில் இவ்விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். வரும் 23-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் 26-ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி வரை விருப்ப மனுக்களை மேற்கண்ட அலுவலகத்தில் பெற்று, நிரப்பி, உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யலாம்  என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10,000, தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5,000, அனைத்து தொகுதியிலும் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ.5,000 வீதம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

Tags : PMK
ADVERTISEMENT
ADVERTISEMENT