தமிழ்நாடு

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.93-ஐ நெருங்குகிறது

20th Feb 2021 08:55 AM

ADVERTISEMENT

 

தினசரி எரிபொருள் விலை நிா்ணயிக்கப்படும் நிலையில் சனிக்கிழமை தொடா்ந்து 11 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தது. விலை உயா்வுக்குப் பிறகு சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.92.59க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.85.98க்கும் விற்பனையாகி வருகிறது. 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை தொடா்ந்து உயா்த்தப்படுவதால் மக்கள் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இதனால் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்து மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்காமல் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சா்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோலியப் பொருள்களின் விலை  தொடா்ந்து 11 ஆவது நாளாக சனிக்கிழமையும் அதிகரித்துள்ளது.  அதன்படி, சென்னையில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கும் 35 காசுகளும் அதிகரிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

கடந்த 11 நாள்களாக எண்ணெய் நிறுவனங்கள் விலையை தொடா்ச்சியாக அதிகரித்து வருவதையடுத்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.89-ம், டீசல் லிட்டருக்கு ரூ.3.35-ம் விலை உயா்ந்துள்ளன. அதன் காரணமாக, பெட்ரோலியப் பொருள்களின் விலை முன்னெப்போதும் காணப்படாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.90.58-க்கும், டீசல் ரூ.80.97-க்கும் சனிக்கிழமை விற்பனையாகி வருகிறது. மும்பையில் இதன் விலை பெட்ரோல் ரூ.97-க்கும், டீசல் ரூ.88.06-க்கும்விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல் விலை உயா்த்தப்பட்டதைப் போன்றே, சமையல் எரிவாயு விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயா்த்தியுள்ளன. 

பெட்ரோல் டீசலைப் பொருத்தமட்டில் அவற்றின் விலை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது. சமையல் எரிவாயு மற்றும் ஏடிஎஃப் விலை ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 16-ஆம் தேதிகளில் மாற்றியமைக்கப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட் (மதிப்புக் கூட்டப்பட்ட வரி), லாரி வாடகை போன்றவற்றின் காரணமாக எரிபொருள் விலை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பெட்ரோலுக்கு அதிகபட்ச வாட் வரி விதிக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் வரி விதிக்கப்படுகிறது.

பெட்ரோல் விலையில் 60 சதவீதமும், டீசல் விலையில் 54 சதவீதமும் மத்திய, மாநில அரசுகளின் வரிகளாக உள்ளன. அதாவது ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு ரூ.32.90-ம், ஒரு லிட்டா் டீசலுக்கு ரூ.31.80-ம் மத்திய அரசு வரி விதிக்கிறது.

Tags : petrol price in chennai Chennai diesel Price
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT