தமிழ்நாடு

நாகர்கோவிலில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து: மூதாட்டி பலி

20th Feb 2021 03:58 PM

ADVERTISEMENT

 

நாகர்கோவிலில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

நாகர்கோவில் மீனாட்சி புரம் தளவாய் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் அம்மாள் (70). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவரது மகள்களும், மகனும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வந்த நிலையில் ஆறுமுகம் அம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டுக்குள் ஏற்பட்ட மின் கசிவால் வீடு தீப்பற்றிக் கொண்டது. மேலும் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளையும் வெடித்தது. இதில் வீடு அடியோடு எரிந்து சாம்பலானது. 

ஆறுமுகம் தீயில் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கோட்டாறு காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT