தமிழ்நாடு

ஓமலூரில் 410 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கல்

20th Feb 2021 12:38 PM

ADVERTISEMENT


ஓமலூரில் 410 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில், ஏழை பெண்களின் திருமணத்துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த தகுதிவாய்ந்த பெண்களுக்கு 410 பேருக்கு சுமார் ரூ.4 கோடி மதிப்பில் தலா ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூர் பகுதியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமை தாங்கினார். இதில், ஓமலூர் அதிமுக சட்டப்ரேவை உறுப்பினர் வெற்றிவேல் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மணி, ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசந்திரன், அம்மா பேரவை செயலாளர் தளபதி, ராஜா, வைரவேல் உள்ளிட்ட பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

Tags : Gold for Tali Omalur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT