தமிழ்நாடு

உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு டோக்கன் வழங்குவதில் முறைகேடு

20th Feb 2021 05:43 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானுத்து கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்பு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்கோவில்பட்டியில் புதன்கிழமை 24ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் சனிக்கிழமை  காளைகளுக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது புதிதாக பதவியேற்றுள்ள ஊராட்சிமன்ற தலைவர் அஜித்பாண்டி (எ) அலெக்ஸ்பாண்டியன் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் அதிகாரிகள் டோக்கன் வழங்குவதில் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். காளைகளின் உரிமையாளர்கள் இரவு முழுவதும் தூங்காமல் டோக்கன் வாங்குவதற்காக காத்துக்கொண்டிருந்தனர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.  பின்னர் அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சுமார் 10 மணிக்கு அலட்சியமாக வந்த முதல் டோக்கன் முதல் நபருக்கு 43 வது நம்பர் வழங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இதில், அதிர்ச்சி அடைந்த அந்த நபர் இவர்கள் எதற்கு ஜல்லிக்கட்டு நடத்துகிறார்கள் என்று விரக்தி அடைந்தார். நாங்கள் இரவு முழுவதும் காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அனைத்து டோக்கன்களையும் அதிகாரிகளும் ஜல்லிக்கட்டு நடத்தும் விழா குழுவினரும் அதிகமான  டோக்கன்களை பெற்றுக்கொண்டனர். 

இதுகுறித்து, உசிலம்பட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி  சென்று கேட்டபோது இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்று தெரிவித்தார். கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் விழா குழுவினருக்கும் பெருமாள் கோவில்பட்யில் கிராம சேவை மைய அலுவலகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது பின்பு ஒருவழியாக வரிசையில் நின்ற முதல் நபருக்கு 433வது டோக்கன்களிலிருந்து வழங்கப்பட்டது. இதனால் அங்கே  இருந்த மாட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

முதல் டோக்கன் 10 மணிக்கு வழங்கி  பிற்பகல் 12 மணிக்கு மொத்தம் 150 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 700 டோக்கன் கொடுக்கப்பட்டதாக  தெரிவித்தனர். மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் டோக்கன் வாங்க முடியாமல் வேதனையுடன் திரும்பி சென்றனர். 

இதில், காளைகளின் உரிமையாளர்கள் கூறும்போது, 

இந்த ஜல்லிக்கட்டு ஊராட்சிமன்ற தலைவர் தனி  நபர் பலத்தை நடத்தப்படுவதாகக் காளையின் உரிமையாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் உசிலம்பட்டி வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுகுறித்து  மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்தனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT