தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 438 பேருக்கு கரோனா; 6 பேர் பலி

20th Feb 2021 08:19 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று புதிதாக 438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இன்று புதிதாக 438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8,47,823 ஆக அதிகரித்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 6 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,457 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 459 போ் கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். இதனால் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8,31,246 ஆக உயா்ந்துள்ளது. 
சென்னையில் இன்று 139 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 299 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது 4,120 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT