தமிழ்நாடு

சின்னமனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

14th Feb 2021 10:19 AM

ADVERTISEMENT

 

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சின்னமனூர் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஐயர் சாமி(50).இவர் வெள்ளிக்கிழமை காவல் நிலையம் எதிரே உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்த சாலையை கடந்து உள்ளார். அப்போது தேனியிலிருந்து உத்தமபாளையம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். 

ADVERTISEMENT

விபத்தில் இறந்த ஐயர் சாமி.

இந்நிலையில், தேனி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஐயர் சாமி சனிக்கிழமை உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக சின்னமனூர் காவல் நிலைய போலீசார் அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டுவதாக கூறி அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சின்னமனூர் போலீசார் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT