தமிழ்நாடு

மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் தொடக்கி வைத்தார்

14th Feb 2021 12:15 PM

ADVERTISEMENT

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.

ரூ.3,370 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று (பிப்.14) தொடக்கி வைத்தார்.

9.06 கிலோ மீட்டர் மெட்ரோ வழித்தடம் வடசென்னையை சென்ட்ரல் மற்றும் விமான நிலையத்துடன் இணைக்கும்.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான புதிய மெட்ரோ ரயிலை பெண் ஓட்டுநர் ரீனா இயக்கினார்.

ADVERTISEMENT

கடற்கரை - அத்திப்பட்டு இடையே 4-வது ரயில் பாதை:

இதேபோன்று சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையே 4-வது ரயில் பாதையைபிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

துறைமுக போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.293.40 கோடி செலவில் 22.1 கிலோமீட்டர் தூரம் ரயில் பாதை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த ரயில் பாதை சென்னை, எண்ணூர், துறைமுகங்களை இணைப்பதுடன் முக்கிய தளங்கள் வழியாக செல்லும்.

மயிலாடுதுறை - திருவாரூர் இடையே ரயில் பாதை:

மயிலாடுதுறை - திருவாரூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ஒற்றை லைன் ரயில் பாதையையும் தொடக்கி வைத்தார்.

ரூ.423 கோடி மதிப்பில் 228 கிலோ மீட்டர் தூரம் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை விரைவான போக்குவரத்திற்கு உதவும்.

மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடத்தால் எழும்பூர் - கன்னியாகுமரி இடையே ரயில்வே லைனை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது.

இந்தத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டதன் மூலம் ரயில் எரிபொருளுக்கான செலவில் நாளொன்றுக்கு ரூ.14.61 லட்சம் மிச்சமாகும்.

ரு.1000 கோடியில் ஐஐடி வளாகத்திற்கு அடிக்கல்:

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஐஐடி டிஸ்கவரி வளாகம் கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் முதல் பகுதி 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT