தமிழ்நாடு

காரைக்காலில் 10 மாதங்களுக்குப் பின் வாரச் சந்தை திறப்பு

DIN

காரைக்கால்:  காரைக்காலில் கரோனா பொது முடக்கத்தால் 10 மாதங்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை திறக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காய்கறிக் கடைகள் இருந்தாலும்,  ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்து, காய், கனிகள் மற்றும் பிற பொருள்களை வாங்க வாரச்சந்தை முக்கியப் பங்கு வகிக்கிறது. காரைக்கால் நகரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சந்தை பல ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.

காரைக்கால் மட்டுமின்றி,  திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இருந்து சுமார் 200 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். விலை குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் சந்தைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் கரோனா பரவல் தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு காரைக்கால் வாரச் சந்தைக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. 

பொதுமுடக்கத்தில் பல தளர்வுகள் செய்யப்பட்டுவந்தாலும், வாரச் சந்தைக்கு மட்டும் அரசு அனுமதி தராமல் இருந்துவந்தது.

வெளியூர் வியாபாரிகள் பலரும் நகராட்சி நிர்வாகத்தை தொடர்புகொண்டு, சந்தை திறப்பு தொடர்பாக கேட்டு வந்தனர். காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சந்தையை நம்பி பிற தொழில் நடத்துவோர், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினரும் சந்தையை தாமதிக்காமல் திறக்கவேண்டுமென வலியுறுத்தி வந்தனர். சில அரசியல் கட்சியினர் இது தொடர்பாக போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சந்தை திறக்க நகராட்சி நிர்வாகம் அனுமதித்தது. வெளியூர் வியாபாரிகள் பலரும் சந்தைக்கு வந்து வியாபாரத்தைத் தொடங்கினர். எனினும், சந்தை திறப்பு தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய அறிவிப்பை செய்யாததாலும், மக்களிடையே இதுதொடர்பாக தகவல் போய் சேராததால் சந்தைக்கு மக்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

ஒலிபெருக்கி வாயிலாக போலீஸார், கரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு தந்துவிடாத வகையில், சமூக இடைவெளியையும், முகக் கவசத்தையும் பின்பற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.

சந்தை திறக்கப்பட்டது தொடர்பாக, இக்கோரிக்கையை முன்வைத்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT