தமிழ்நாடு

கடலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மீது காவல்துறை தாக்குதல்: வைகோ கண்டனம்

13th Feb 2021 04:59 PM

ADVERTISEMENT

கடலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்ணில் திருச்ஞி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பதிகளுக்காக காட்டுமன்னார்கோவில் பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள இடங்களை அரசு அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் குடியிருப்போருக்கு உரிய நட்ட ஈடு கிடைக்காததால் அப்பகுதி மக்கள், அரசு கைப்பற்றும் நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு ஈட்டுத் தொகையை அணிகரித்து வழங்கக் கோரி வருகின்றனர். இந்நிலையில் வீரானந்தபுரம் கிராமத்தில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் புடைசூழ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடுகளைப் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிப்பதற்கு முன்வந்தனர். 
அப்போது பாதிக்கப்பட்ட மக்கள், அரசுக்கு அளித்துள்ள கோரிக்கையைக் கூறி, நட்ட ஈட்டுத் தொகையைக் கூடுதலாக வழங்கும்வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். மக்களின் உள்ளக் குமுறலை ஜனநாயக அறவழியில் எடுத்து வைத்ததற்காக விவசாயச் சங்கத் தலைவர் இளங்கீரனை காவல்துறை அடித்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். வேளாண் கடன் தள்ளுபடி குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தான் காரணமாக இருந்தார் என்று கடந்த 10ஆம் தேதி அவரைச் சந்தித்து இளங்கீரன் உள்ளிட்ட விவசாயச் சங்கத் தலைவர்கள் நன்றி கூறி வாழ்த்தினர். 
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக அரசு, இளங்கீரன் மீது வன்மத்துடுன் காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தி இருக்கின்றனது. காவிரி டெல்டா விவசாயச் சங்கக் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

Tags : Vaiko
ADVERTISEMENT
ADVERTISEMENT