தமிழ்நாடு

கூத்தாநல்லூரில் மாடித் தோட்டப் பயிற்சி

13th Feb 2021 05:59 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மாடித் தோட்டப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையும் இணைந்து மாடித்தோட்டப் பயிற்சியை கூத்தாநல்லூரில் நடத்தினர். பயிற்சிக்கு, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தலைமை வகித்தார். 

மும்பை பிரதிநிதி அ.மரியதாஸ், நீடாமங்கலம் நகர அமைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன், சமூக ஆர்வலர் உமர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூத்தாநல்லூர் கிரீன் நீடா நகர அமைப்பாளர் எஸ்.எம். சமீர் வரவேற்றார். 

ADVERTISEMENT

பயிற்சியை, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் அஷ்ரப் அலி தொடங்கி வைத்துப் பேசியது.

மாடித்தோட்டம் அமைத்து நஞ்சில்லாத காய்கறிகளைச் சாப்பிடத் தொடங்கினாலே ஊட்டச்சத்து அதிகரித்து நோய்கள் இல்லாமல் வாழலாம். தொடர்ந்து, இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை உண்பதால் புற்றுநோய் வருவதைக் கூட தடுத்து விடலாம். மாடித் தோட்டத்தைப் பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது உள்ளிட்ட ப் பணிகளைச் செய்வதே மனதிற்கும் மகிழ்ச்சியை உண்டாக்கி, உடற்பயிற்சியாகவும் அமைகிறது என்றார். 

பயிற்சி மற்றும் செயல் விளக்கங்களைத் தோட்டக்கலை உதவி இயக்குநர் கே.இளவரசன் விளக்கினார். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மானிய விலையில் மாடித் தோட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. கூத்தாநல்லூர் பகுதியில் 200 வீடுகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு முன்பதிவு செய்து உள்ளனர். இத்தோட்டத்தில் நாட்டுக் காய்கறிகள் மட்டும் இயற்கை முறையில் வளர்க்கப் பரிந்துரைக்கப்படுகிறது எனத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தெரிவித்தார். நிறைவாக, இணை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT