தமிழ்நாடு

வாழப்பாடி விவசாயிகளுக்கு திருச்சியில் பயிர் பாதுகாப்பு பயிற்சி முகாம்

13th Feb 2021 03:54 PM

ADVERTISEMENT

 
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் மூலம், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் 3 நாள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.     

வாழப்பாடி வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 விவசாயிகள் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரிக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி பெற அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், பேராசிரியர்கள் சத்யா, சரவணன், ஜெயகுமார் ஆகியோர்கள் விவசாயிகளுக்கு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை, பயிரைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள் மற்றும் நூற்புழுக்கள், உயிரியல் முறை மற்றும் பூச்சிக் கொல்லி முறைக்கட்டுப்பாடு, இயற்கை வழி பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு  பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சி பயன் உள்ள வகையில் அமைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். வாழப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி வழிகாட்டுதலின்படி, வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர் அற்புதவேலன் மற்றும் உதவி மேலாளர்கள் மணிகண்டன், ரமேஷ் ஆகியோர் விவசாயிகளை  பயிற்சி முகாமிற்கு அழைத்துச் சென்று திரும்பினர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT