தமிழ்நாடு

விழுப்புரம்: காவல்துறையினருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

13th Feb 2021 01:31 PM

ADVERTISEMENT


விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினருக்கும் தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சார்பில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து காவல்துறையினருக்கும் தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

ADVERTISEMENT

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையினருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில், தனிப் பிரிவு ஆய்வாளர் ரேவதி, ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் அலுவலக ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

முதல் நாளில் காவல்துறையைச் சேர்ந்த 85 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத் தொடர்ந்து 2,300 பேருக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட 15 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 5,150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT